வேனேசுஏல நிலநடுக்க மரணம் 1,719 ஆக உயர்வு, 70,000 தொலைவு 

வேனேசுஏல நிலநடுக்க மரணம் 1,719 ஆக உயர்வு, 70,000 தொலைவு 

கடந்த புதன்கிழமை வேனேசுஏலவில் (Venezuela) இடம்பெற்ற 7.2 மற்றும் 7.5 அளவுகளிலான ஒன்றன் பின் ஒன்றான இரண்டு நிலநடுக்கங்களுக்கு பலியானோர் தொகை 1,719 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் காயமடைந்தோர் தொகை 5,034 ஆகவுள்ளது.

அதேநேரம் மேலும் 70,000 பேர் வரை இருப்பிடம் அறியப்படாது உள்ளனர். அழிவின் உக்கிரத்தை அறிந்த ஐ.நா. ஏற்கனவே 10,000 உடல்களை வைக்கும் body-bag களை  வேனேசுஏலவுக்கு அனுப்பி உள்ளது.

நிலநடுக்கம் இடம்பெற்று 32 மணித்தியாலங்களுக்கு பின் ஒரு தாயும், அவரின் குழந்தையும் மீட்கப்பட்டு உள்ளனர். 

பொதுவாக 72 மணித்தியாலங்களுக்கே இடிபாடுகளில் அகப்பட்டோர் உயிருடன் மீட்கப்படுவர். ஆனால் ஒரு தந்தையும், மகனும் 4 தினங்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

அங்கு சில வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் தொகை 800% ஆக உள்ளதாம். அதாவது முறைப்படி அனுமதிக்கப்பட்ட தொகையின் 8 மடங்கு தொகையினர் சிகிச்சை பெறுகின்றனர்.