ஐரோப்பாவில் தொடரும் கடும் வெப்பத்துக்கு பெருமளவு மக்கள் தொடர்ந்தும் பலியாகி வருகின்றனர். பிரான்சில் மட்டும் இதுவரை 2,025 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் பெருமளவானோர் 45 வயதுக்கும் அதிகமானோர் என்றும் கூறப்படுகிறது. பாரிஸில் வெப்பநிலை 41 C வரை உயர்ந்துள்ளது.
பெல்ஜியத்தில் இந்த வெப்பத்துக்கு 1,222 பேர் பலியாகி உள்ளனர். இதில் அரை பங்கினர் 85 அல்லது அதற்கும் அதிக வயதுடையோர்.
நெதர்லாந்தில் இந்த வெப்பத்துக்கு 480 பேர் பலியாகி உள்ளனர். இங்கு வெப்பநிலை 40 C வரை உயர்ந்துள்ளது.
போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் வெப்பநிலை 40 C வரை உயர்ந்துள்ளது.
