பல மில்லியன் மக்கள் முன்னிலையில் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் தலைவர் அயதொல்லா அலி கமெனியின் மரண சடங்கு இரண்டாம் தினமாக இன்று ஞாயிறு தொடர்கிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28ம் திகதி ஈரான் மீது காரணம் இன்றி பெரும் தாக்குதலை ஆரம்பித்தபோது 1) ஈரானின் தலைமையை அழித்து தமது கை பொம்மையை ஆட்சியில் அமர்த்துவது, 2) ஈரானின் யுரேனியத்தை அமெரிக்காவுக்கு எடுத்து செல்வது, 3) ஈரானின் எண்ணெய் வளத்தை கைக்கொள்வது போன்ற கபட நோக்கங்களை கொண்டிருந்தன.
ஆனால் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு தாக்குதல் மேற்படி நோக்கங்களை அடைய வழி செய்யவில்லை. முரணாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் தற்போது ஆப்பு இழுத்த குரங்கு போல் யுத்தத்தில் இருந்து வெளியேற முடியாது முழிக்கின்றார்.
நாளை திங்கள் இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா சென்று ரம்புடன் அவர்களின் அடுத்த திட்டத்தை தீட்டவுள்ளனர்.
இன்று ஞாயிறு முதல் ஈரானுக்கும் கட்டாருக்கும் (Qatar) இடையில் வர்த்தக கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
