பொருட்களை காவும் விமானம் இந்து சமுத்திரத்துள் விழுந்தது

பொருட்களை காவும் விமானம் இந்து சமுத்திரத்துள் விழுந்தது

ஜூலை 7ம் திகதி UAE யின் Sharjah விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் நோக்கி சென்ற பொருட்களை காவும் Boeing 737 வகை விமானம் ஒன்று அரபுக்கடலை அண்டிய இந்து சமுத்திரத்தில் விழுந்து தொலைந்துள்ளது.

இந்த விமானம் முதலில் சுமார் ஒரு நிமிடத்தில் 5,000 அடி கீழே இறங்கி, அடுத்த 30 செக்கண்ட்களில் 6,000 அடி மேலே ஏறி பின் 36,000 அடி கீழே விழுந்துள்ளது. 

K2 Airways என்ற விமான சேவைக்கு சொந்தமான இந்த விமானத்தில் 5 பணியாளர் இருந்துள்ளனர். பாகிஸ்தான் விமானத்தை தேடும் பணிகளை ஆரம்பித்துள்ளது

சுமார் 27 ஆண்டுகள் பழைய இந்த விமானம் முதலில் பயணிகள் விமானம் ஆக அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் பொருட்களை காவும் விமானமாக மாற்றம் செய்யப்பட்டது.