இந்துக்களை சிறைக்கு அனுப்பிய இஸ்லாமிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் 

இந்துக்களை சிறைக்கு அனுப்பிய இஸ்லாமிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் 

2022ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் மாடுகளை வாகனம் ஒன்றில் ஏற்றி சென்ற 50 வயதான Nazir Ahmad என்ற இஸ்லாமியரையும் வேறு இருவரையும் 14 இந்துவாதிகள் இடைமறித்து தாக்கினர்.

தாக்குதலுக்கு உள்ளான Nazir Ahmad பலியானார். காயங்களுக்கு உள்ளான ஏனைய இருவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் தாக்குதல் செய்த 14 பேரும் கைது செய்யப்பட்டனர்.

வழக்கை விசாரணை செய்த Tabassum Khan என்ற இஸ்லாமிய பெண் நீதிபதி ஜூன் 12ம் திகதி 14 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை தீர்ப்பு வழங்கி இருந்தார்.

அன்றில் இருந்து நீதிபதிக்கு கொலை மிரட்டல்களும், இணையம் மற்றும் தொலைபேசி மூல அவதூறுகளும் தொடர்கின்றன. 

கொலை மிரட்டல் காரணமாக நீதிபதிக்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.