ஹோர்முஸ் ஊடு செல்ல ரம்ப் 20% கட்டணம் அறிவிப்பு

ஹோர்முஸ் ஊடு செல்ல ரம்ப் 20% கட்டணம் அறிவிப்பு

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மீண்டும் சண்டை உக்கிரம் அடைந்த நிலையில் அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஹோர்முஸ் நீரிணை ஊடு செல்லும் கப்பல்கள் காவும் பொருட்களின் பெறுமதியின் 20% பெறுமதியான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று இன்று திங்கள் கூறியுள்ளார்.

இன்று முதல் அமெரிக்காவே “The Guardian of the Hormuz Strait” என்றும் ரம்ப் கூறியுள்ளார்.

ரம்புக்கு 20% கட்டணம் செலுத்தினாலும் அவ்வழியே செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கி அழித்தால் அமெரிக்கா அந்த கப்பல்களுக்கோ, அவற்றில் காவப்படும் பொருட்களுக்கோ நட்டஈடு வழங்கப்போவது இல்லை.

சாதாரணமாக நட்டஈடு காப்புறுதி நிறுவனங்களாலேயே வழங்கப்படும். இங்கே அழிவுக்கான சந்தர்ப்பம் அதிகரித்த நிலையில் காப்புறுதி நிறுவனங்கள் கப்பல்களை காப்புறுதி செய்ய முன்வரா.

அதேநேரம் ஈரான் துறைமுகங்கள் மீது தடையையும் ரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.