இரண்டு வள்ளங்களில் பர்மா-பங்களாதேஷ் எல்லை பகுதி கரையோரத்தில் இருந்து பயணித்த 530 ரோஹிங்கிய அகதிகள் அவர்கள் பயணித்த வள்ளங்கள் கவிழ்ந்து பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஜூன் மாதம் 29ம் திகதி காலை ஒரு வள்ளமும் பிற்பகல் இன்னோர் வள்ளமும் தெற்கு நோக்கி 530 அகதிகளுடன் பயணித்துள்ளன. இவர்களின் நோக்கம் தெற்கு பர்மா அல்லது இந்தோனேசியாவை அடைவதாக இருந்திருக்கலாம்.
இவ்வாறு செல்வோர் 10 தினங்களுக்குள் செல்லுமிடம் அடைந்த செய்தியை தமது குடும்பங்களுக்கு அறிவிப்பர். ஆனால் மேற்படி அகதிகள் எவரும் தமது குடும்பங்களுடன் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.
அதேவேளை இப்பகுதிகளில் சில உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு ஆபத்தான வழிகளில் அகதிகளை கடத்தும் குழுக்கள் ஆளுக்கு $3,000 வரை அறவிடுகின்றன.
