பலஸ்தீனர் அழிப்பை நிறுத்த கேட்கும் முன்னாள் இஸ்ரேல் தளபதிகள் 

பலஸ்தீனர் அழிப்பை நிறுத்த கேட்கும் முன்னாள் இஸ்ரேல் தளபதிகள் 

West Bank பலஸ்தீனர் மீது அங்கு ஆக்கிரமித்துள்ள கடும்போக்கு யூதர்கள் செய்யும் கொலைகள், வன்முறைகள், அழிப்புகள் ஆகியவற்றை தடுத்து நிறுத்த இஸ்ரேல் பிரதமரை பணிக்குமாறு அமெரிக்க சனாதிபதி ரம்பை Commanders For Israel’s Security (CIS) என்ற இஸ்ரேல் அமைப்பின் முன்னாள் இஸ்ரேல் தளபதிகள் கேட்டுள்ளனர்.

இந்த பகிரங்க கடிதம் ஜூலை 27ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 28ம் திகதி இஸ்ரேல் பிரதமர் ரம்பை சந்திக்கவுள்ளார்.

சுமார் 550 முன்னாள் இஸ்ரேல் ஜெனரல்கள், கேணல்கள் மற்றும் உயர் அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்ட CIS அமைப்பு West Bank கை ஆக்கிரமித்துள்ள யூதர்கள் பலஸ்தீனர் மீது செய்யும் வன்முறைகளை பயங்கரவாதம் (“settler terror”) என்றே விபரித்துள்ளது.

பிரதமர் நெற்றன்யாஹு அரசில் உள்ள சில அமைச்சர்களே வன்முறைகளை தூண்டி விடுவதாகவும் CIS கூறியுள்ளது.