FIFA உதைபந்தாட்ட விளையாட்டு நிகழ்வுகளை நிர்வகிக்கும் பொறுப்பை அமெரிக்க சனாதிபதி ரம்பின் குடும்பத்துக்கு தாரைவார்க்க ரம்புடன் நெருக்கமான உறவை கொண்ட FIFA அதிபர் Gianni Infantino முயற்சி செய்கிறார்.
அது மட்டுமன்றி ரம்ப் குடும்ப நிர்வாகத்தில் தனக்கும் ஒரு நிரந்தர பதவியை உருவாக்க முனைகிறார் Infantino.
ரம்பின் மருமகன் Kushner உட்பட பல செல்வந்தர்கள் $20 பில்லியன் முதலீடு செய்து ஆரம்பிக்கும் FIFA Forward Enterprise என்ற நிறுவனம் FIFA நிகழ்வுகளை நிர்வகிக்கும் என்பதே திட்டம்.
இந்த திட்டத்தை அறிந்த 55 FIFA உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய உதைபந்தாட்ட அமைப்பான UEFA கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
FIFA தற்போது 211 நாடுகளை உறுப்பினர்களாகவும், சுவிஸ் நாட்டை தளமாகவும் கொண்ட இலாப நோக்கம் அற்ற (not-for-profit) அமைப்பு.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இடம்பெற்ற 2026ம் ஆண்டுக்கான FIFA World Cup $12 பில்லியன் வருமானத்தை வழங்கியுள்ளது.
