துருக்கி, சவுதி, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் NATO வகையிலான புதிய இராணுவ அணி ஒன்றை அமைக்கும் திட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை கையொப்பம் இட்டுள்ளன. துருக்கி பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் இதற்காக சவுதியில் உள்ள Mecca சென்றுள்ளனர்.
NATO அணி விதிகளில் ஒன்று ஒரு NATO நாடு தாக்கப்பட்டால் அது அனைத்து NATO நாடுகளையும் தாக்கியதாக கொள்ளப்படும். வகை இணக்கம் ஒன்று துருக்கி-சவுதி-பாகிஸ்தான் அணியிலும் உள்ளது.
ஆனால் இந்த அணியின் உருவாக்கத்துக்கு முன்னரே சவுதிக்கு, ஈரானுக்கும் இடையிலும், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலும் ஏற்கனவே யுத்தங்கள் தொடர்கின்றன. இந்நிலையில் முன் ஆரம்பித்த யுத்தங்களை பின் வந்த இராணுவ இணக்கம் எவ்வாறு கையாளும்?
இதுவரை அமெரிக்கா தம்மை பாதுகாக்கும் என்று நம்பிய சவுதி ஏமாற்றம் அடைந்தமை சவுதி ஒரு புதிய அணியை நாட பிரதான காரணம் என்று கருதலாம்.
அதேவேளை பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா இந்த அணியை எவ்வாறு கையாளும் என்பதுவும் கேள்விக்குறியாக உள்ளது.
துருக்கி ஏற்கனவே NATO அணியிலும் இவ்வகை இணக்கத்தை கொண்டுள்ளது. இந்நிலையில் NATO நாடு ஒன்று சவுதியை அல்லது பாகிஸ்தானை தாக்கினால் துருக்கி என்ன செய்யும்?
இந்த அணி மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆளுமையை வலுவிழக்க செய்யும்.
