USS Abraham Lincoln என்ற அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் பணியாற்றும் அமெரிக்க கடற்படை உறுப்பினர் சிலர் கப்பலால் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளனர்.
சுமார் 5,000 படையினருடன் ஈரான் யுத்த முனையில் போராடும் இந்த கப்பலில் நிலவும் போதிய வசதிகள் இன்மையும், தொடர்ச்சியான நீண்டகால வேலைப்பளுவும் தற்கொலை முயற்சிகளுக்கு காரணங்கள் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக மலசலகூடங்கள் அடைதல், சுகாதார குறைபாடுகள், போதிய உணவு இன்மை போன்ற இடர்கள் அறியப்பட்டுள்ளன. ஒரு படை உறுப்பினர் கடந்த 6 மாதங்களில் 29 kg எடையை இழந்துள்ளதாக அவரின் குடும்பம் கூறியுள்ளது.
அமெரிக்க விதிப்படி விமானம் தாங்கி கப்பல்கள் 210 தினங்களே தொடர்ச்சியாக யுத்த முனை சேவையில் ஈடுபடலாம். வியடனாம் யுத்தம் போன்ற சில நீண்ட யுத்த காலங்களில் இந்த விதி மீறப்பட்டும் உள்ளது.
USS Abraham Lincoln ஐ விடுவிக்க தற்போது மலேசியாவுக்கு அண்மையில் நிலைகொண்டுள்ள USS George Washington விரைகிறது.
