ஏவுகணைகள் தீர்ந்தால் யூகிறேனில் பயனற்று இருக்கும் ஏவிகள்

ஏவுகணைகள் தீர்ந்தால் யூகிறேனில் பயனற்று இருக்கும் ஏவிகள்

ரஷ்யா யூகிறேனை ஆக்கிரமித்த பின்,ரஷ்யா ஏவும் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கியழிக்க, அமெரிக்கா தனது அதிநவீன, விலை உயர்ந்த Patriot தடுப்பு ஏவுகணைகளை யூகிறேனுக்கு வழங்கியது.

ஆனால் பின்னர் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்து அதற்கு பெருமளவு Patriot ஏவுகணைகள் செலவாக அமெரிக்காவின் Patriot ஏவுகணை கையிருப்பு ஆபத்தான அளவுக்கு குறைந்துள்ளது.

தனது கையிருப்பு குறைந்ததால் அமெரிக்கா யூகிறேனுக்கு Patriot ஏவுகணைகளை வழங்குவதை நிறுத்த, யூகிறேனிடம் உள்ள விலை உயர்ந்த ஏவிகள் ஏவுவதற்கு ஏவுகணைகள் இன்றி பயனற்று உள்ளன.

அங்குள்ள 16 குழாய்களை கொண்ட ஒரு ஏவி கடந்த 10 கிழமைகளாக எந்தவொரு ஏவுகணையையும் ஏவவில்லை என்று கூறப்படுகிறது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் சுமார் 900 Patriot தடுப்பு ஏவுகணைகளை முதல் 4 தினங்களில் ஏவி உள்ளன. அதாவது தினமும் 225 ஏவுகணைகள் ஏவப்பட்டு உள்ளன.

மறுபுறம் இதை தயாரிக்கும் Lockheed Martin என்ற நிறுவனம் தற்போது தினமும் 1 அல்லது 2 தடுப்பு ஏவுகணைகளை மட்டுமே தயாரிக்க முடியும்.