ஏனைய நாடுகளுடன் அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆரம்பித்த வர்த்தக யுத்தங்களை போலவே அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் ரம்ப் ஆரம்பித்த வர்த்தக யுத்தம் மேலும் உக்கிரம் அடைகிறது.
கனடிய பிரதமர் கார்னி பதவிக்கு வந்த காலத்தில் தான் ரம்புடன் பேசி ஒரு உடன்படிக்கைக்கு வரலாம் என்று கொண்டிருந்த கனவு பலிக்காது போக, தற்போது அவரும் அமெரிக்க பொருட்கள் சிலவற்றுக்கு பதில் இறக்குமதி வரிகளை சனிக்கிழமை அறிவித்து உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்க்க பேச்சுக்கள் வெள்ளிக்கிமைமை முறிய, ரம்ப் $20 பில்லியன் பெறுமதியான கனடிய பொருட்க்ளுக்கு மேலும் 50% இறக்குமதி வரியை அறிவித்து இருந்தார். இத்தொகை கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொத்த தொகையின் 5% மட்டுமே.
உடனே பிரதமர் கார்னியும் பதிலடி இறக்குமதி வரிகளை அமெரிக்க பொருட்களுக்கு அறிவித்து உள்ளார். அமெரிக்கா கொஞ்சம் தந்து அதிகம் கேட்கிறது (They asked too much and offered too little) என்று அமெரிக்கா மீது குற்றம் சுமத்தியுள்ளார் கார்னி. கனடாவின் புதிய இறக்குமதி வரி செப்டம்பர் 8ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
