இந்த ஆண்டு இதுவரை 1.46 மில்லியன் உல்லாச பயணிகள் வருகை 

இந்த ஆண்டு இதுவரை 1.46 மில்லியன் உல்லாச பயணிகள் வருகை 

இந்த ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் ஆகஸ்ட் 18ம் திகதி வரையான காலத்தில் 1,468,980 உல்லாச பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று Sri Lanka Tourism Development Authority (SLTDA) கூறியுள்ளது.

இக்காலத்தில் முதலாவதாக 366,114 இந்திய உல்லாச பயணிகளும் (சுமார் 25%), இரண்டாவதாக 144,381 பிரித்தானிய உல்லாச பயணிகளும், மூன்றாவதாக 97,073 சீன உல்லாச பயணிகளும் வந்துள்ளனர்.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதமே அதிக உல்லாச பயணிகள் (279.328) இலங்கை வந்துள்ளனர்.

ஆகஸ்ட் மாத முதல் 18 தினங்களில் மட்டும் 27,884 இந்தியர்களும், 13,980 பிரித்தானியரும், 8,776 பிரெஞ்சு நாட்டவரும் இலங்கை வந்துள்ளனர்.

இந்த ஆண்டு 3 மில்லியன் உல்லாச பயணிகள் வரக்கூடும் என்றும் அவர்களின் வருகையால் $4.5 பில்லியன் வருமானம் கிடைக்கலாம் என்றும் SLTDA ஆண்டின் ஆரம்பத்தில் கணித்து இருந்தது. ஈரான் மீதான யுத்தம் உல்லாச பயணிகள் பயணங்களை கணிசமான அளவு பாதித்து இருந்தது.