சீன/திபெத் எல்லையோரம், Kailash மலைக்கு தென்கிழக்கே, Gosaikunda வாவிக்கு அண்மையில் இடம்பெற்ற மண் சரிவுடன் கூடிய வெள்ள பெருக்குக்கு குறைந்தது 157 பலியாகியும், மேலும் பல நூறு பேர் தொலைந்தும் உள்ளனர். மரணித்தோர் தொகை மேலும் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இவ்விடம் உல்லாச பயணிகளை கவரும் இடம் ஆகையால் பாதிக்கப்பட்டோரில் பலரும் வெளிநாட்டவர். தொலைந்து உள்ளோரில் குறைந்தது 100 இந்தியரும், 54 அமெரிக்கரும், 53 யூகிறேனியரும், 33 பிரித்தானியரும், 24 கனடியரும், சில அஸ்ரேலியரும் அடங்குவர்.
திபெத் பக்கத்தில் 3 பேர் பலியாகியும், 265 பேர் தொலைந்தும் உள்ளனர் என்று சீனா கூறியுள்ளது.
மிகப்பெரிய மண் சரிவே மேற்படி அழிவை ஆரம்பித்தது என்றும், இந்த மண் சரிவின் தாக்கம் 5.2 அளவிலான நிலநடுக்கத்துக்கு ஒப்பானது என்றும் அமெரிக்க USGS கூறியுள்ளது.
