உலக அளவில் அரச Bond கடன்களுக்கு கேள்வி (demand) குறைய, அவற்றின் விலைகள் குறைந்து அவற்றுக்கு செலுத்தப்படும் வட்டியும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக bond சந்தையில் நாணயம் மிக்க bond களை கொண்டிருந்த ஜப்பான் அரச 10-ஆண்டு bond கடனுக்கு கிடைக்கும் வட்டி 1996ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக 3% ஆக அதிகரித்து உள்ளது.
அமெரிக்க அரச 10-ஆண்டு bond கடனுக்கு கிடைக்கும் வட்டி 4.8% ஆக அதிகரித்து உள்ளது. இங்கு 30-ஆண்டு bond கடனுக்கு கிடைக்கும் வட்டி 2007ம் ஆண்டுக்கு பின் ஆகஸ்ட் மாதம் 5.3% ஆக அதிகரித்து உள்ளது.
பிரித்தானிய அரச 30-ஆண்டு bond கடனுக்கு கிடைக்கும் வட்டி 1998ம் ஆண்டுக்கு முன்னான அளவுக்கு அதிகரித்து உள்ளது. ஜெர்மன் அரச 10-ஆண்டு bond கடனுக்கு கிடைக்கும் வட்டி 2011ம் ஆண்டுக்கு முன்னான அளவுக்கு அதிகரித்து உள்ளது.
ஒரு நாட்டின் அரச bond விலை வீழ்ச்சி அடைந்தால் அந்த நாட்டில் பணவீக்கம் இடம்பெறுகிறது என்று கணிக்கப்படும். அதனால் அந்த நாடுகள் தமது மத்திய வங்கிகளின் வட்டியை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
அவ்வாறு மத்திய வங்கிகள் தமது வட்டியை அதிகரித்தால் வீட்டு கடன் (mortgage), வாகன கடன் போன்ற தனியார் கடன் வட்டியும் அதிகரிக்கும். அந்நிலை பொருளாதாரத்தை மேலும் அழுத்தும்.
உலக அளவில் bond பெறுமதிகள் வீழ்ச்சி அடைய ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டின் போர் முதலாவது காரணி ஆகும். Brent எண்ணெய் விலை செவ்வாய் 4.6% வீதத்தால் அதிகரித்து பரல் ஒன்றுக்கு $94.65 ஆக அதிகரித்து உள்ளது.
