அமெரிக்காவில் கலன் டீசலின் விலை $5.85

அமெரிக்காவில் கலன் டீசலின் விலை $5.85

வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் ஒரு US கலன் (3.78 லிட்டர்) டீசலின் விலை $5.85 ஆக உயர்ந்துள்ளது. அது லிட்டர் ஒன்றுக்கு $1.55 ஆகும்.

பெப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலை ஆரம்பிக்க முன் அமெரிக்காவில் டீசலின் விலை $3.76 ஆக மட்டுமே இருந்தது.

டீசலில் இயங்கும் பெரிய வாகனங்களே நுகர்வோர் பொருட்களையும், வர்த்தகங்களுக்கு இடையேயான காவுதல்களை செய்வதாலும் அதிகரித்த டீசல் விலை அமெரிக்க பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும்.

பெட்ரோல் விலையும் கலன் ஒன்றுக்கு $4.15 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒரு கலன் பெட்ரோல் விலை $3.20 ஆக இருந்தது.

பெப்ரவரி மாதத்தின் பின் டீசலின் விலை நைஜீரியாவில் 90% ஆலும், இந்தோனேசியாவில் 87% ஆலும், லெபனானில் 77% ஆலும் அதிகரித்து உள்ளன.

அதிக வரி காரணமாக ஹாங்காங்கில் ஒரு கலன் டீசலின் விலை $17.73 ஆக உள்ளது. உலகில் இதுவே டீசலுக்கான அதி உயர் விலையாகும்.