இதுவரை கனடிய பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரிகளை மட்டும் நடைமுறை செய்த ரம்ப் தற்போது கனடிய பால் உணவுகள், மதுபானம், வாகனம் போன்றவற்றுக்கு செவ்வாய்க்கிழமை முற்றாக இறக்குமதி தடை அறிவித்துள்ளார். இந்த தடை செப்டம்பர் 29ம் நடைமுறைக்கு வரும்.
கடந்த மாதம் ரம்ப் $20 பில்லியன் பெறுமதியான கனடிய பொருட்களுக்கு 50% மேலதிக வரியை அறிவிக்க, கனடா பதிலுக்கு அதே அளவு பெறுமதியான சில அமெரிக்க பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரியை அறிவித்தது. அதனால் மூர்க்கம் கொண்ட ரம்ப் புதிய தடையை அறிவித்துள்ளார்.
சில கனடிய பொருட்களுக்கு தடை விதித்தது மட்டுமன்றி ரம்ப் அலுமினிய பொருட்கள் போன்ற மேலும் சில பொருட்களுக்கு மேலதிக 50% வரியையும் அறிவித்துள்ளார். இந்த வரி செப்டம்பர் 15ம் திகதி நடைமுறைக்கு வரும்.
