ஜெர்மன் ஆளும் கட்சி ஆபத்தில், கடும்போக்கு AfD வளர்ச்சியில்

ஜெர்மன் ஆளும் கட்சி ஆபத்தில், கடும்போக்கு AfD வளர்ச்சியில்

ஞாயிறு இடம்பெற்ற Mecklenburg-Vorpommern என்ற இரண்டாம் மாநிலத்திலும் கடும்போக்கு வலதுசாரி (far-right) கட்சியான AfD (Alternative for Germany) சுமார் 38% வாக்குகளை பெற்று வெற்றி ஈட்டுகிறது. 

இரண்டாம் இடத்தில் உள்ள center-left கட்சியான SPD (Social Democrats) சுமார் 35.4% வாக்குகளை பெறுகிறது.

ஆளும் கட்சியான அதிபர் Friedrich Merz யின் CDU (Christian Democratic Union) கட்சி 4.9% வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் கணிக்கப்படுகிறது. சட்டப்படி 5% க்கும் குறைவான வாக்குகளை பெறும் கட்சி மாநில சபையில் இருந்து விலக்கப்படும். அதிபர் இந்த தேர்தல் முடிவை “It is a disaster” என்று விபரித்துள்ளார்.

ஞாயிறு இடம்பெற்ற பெர்லின் (Berlin) தேர்தலிலும் Die Linke கட்சி 26% வாக்குகளை பெற்று முதல் இடத்தில் இருக்கையில், ஆளும் கட்சி இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டு உள்ளது. இங்கேயும் 2023ம் ஆண்டு 9.1% வாக்குகளை பெற்ற AfD இம்முறை 13.5% வாக்குகளை பெறுகிறது.

இரண்டு கிழமைகளுக்கு முன் Saxony-Anhalt மாநிலத்து தேர்தலில் AfD கட்சி 44% வாக்குகளை பெற்று முதல் இடத்தை அடைந்திருந்தது.

Saxony-Anhalt, Mecklenburg-Vorpommern ஆகிய இரண்டு மாநிலங்களும் முன்னாள் கிழக்கு ஜெர்மனிக்கு உரியவை. இங்கேயே AfD கட்சி பெரும் ஆதரவை கொண்டுள்ளது.