சீன சனாதிபதி சீயை ரம்ப் விமான நிலையம் சென்று வரவேற்பு 

சீன சனாதிபதி சீயை ரம்ப் விமான நிலையம் சென்று வரவேற்பு 

ஐ.நா. அமர்வுக்கு புதன்கிழமை மாலை அமெரிக்கா சென்ற சீன சனாதிபதி சீயை அமெரிக்க சனாதிபதி ரம்ப் Joint Base Andrews விமான நிலையம் சென்று நேரடியாக வரவேற்றுள்ளார்.

விமானத்தில் இருந்து இறங்கும் சீக்கு 100 அடி நீள செங்கம்பளம் விரிக்கப்பட்டது. கூடவே இரண்டு அமெரிக்க B1 குண்டு வீச்சு விமானங்கள் மேலால் பறந்து சீயை வரவேற்றன.

வழமையாக அமெரிக்கா செல்லும் பிரதானிகளை அமெரிக்க சனாதிபதி வெள்ளை மாளிகையில் வைத்தே வரவேற்பார். 

அத்துடன் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக முரண்பாட்டு மோதல் தவிர்ப்பை 2027ம் ஆண்டு ஜனவரி 10ம் வரை நீடிக்கவும் அமெரிக்கா இணங்கியுள்ளது. இந்த மோதல் தவிர்ப்பு நவம்பர் மாதம் முடிவடைய இருந்தது.

சீயும் ரம்பும் வியாழன் மீண்டும் சந்தித்து பிரதான விசயங்களை உரையாடுவர்.