இந்திய மத்திய அரசின் கல்வி அமைச்சர் மீது போர்க்கொடி தூக்கி இறுதியில் அவரின் அமைச்சர் பதவியை பறித்து வீட்டுக்கு அனுப்பிய இந்திய Cockroach கட்சியினர் தற்போது இந்திய மத்திய அரசின் தேர்தல் பிரதம ஆணையாளர் மீது பொற்கொடியை தூக்கி உள்ளனர்.
வெள்ளி இடம்பெற்ற Jantar Mantar என்ற எதிர்ப்பு ஊர்வலத்தில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்திய பிரதான தேர்தல் ஆணையாளர் Gyqnesh Kumar (Chief Election Commissioner) பிரதமர் மோதி தலைமையிலான ஆளும் பா.ஜ. கட்சிக்கு சார்பான தேர்தல் கொள்கைகளை கொண்டுள்ளார் என்று குற்றம் சுமத்தப்படுகிறது.
இதற்கு முன் The Indian Express செய்தி சேவை மேற்படி குற்றச்சாட்டை ஆதரிக்கும் வகையில் விசாரணை கட்டுரை ஒன்றை செப்டம்பர் 23ம் திகதி வெளியிட்டு இருந்தது.
அந்த கட்டுரையின்படி ஏனைய ஆணையாளர்களான Sukbir Singh Sandhu, Vivek Joshi ஆகிய இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 தடவைகள் Gygnesh க்கு எதிராக கேள்விகளை எழுப்பி இருந்தாலும் அவை விசாரணை செய்யப்படவில்லை.
