பிரித்தானிய விமான தளத்தை தாக்க முயற்சி? ஐவர் கைது

பிரித்தானிய விமான தளத்தை தாக்க முயற்சி? ஐவர் கைது

அமெரிக்க விமான படையால் அதிகம் பயன்படுத்தப்படும் Gloucestershire என்ற நகரத்தில் உள்ள RAF Fairfield என்ற பிரித்தானிய விமான தளத்தை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்று கருதப்படும் 5 பேர் பிரித்தானிய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிறு அதிகாலை கைது செய்யப்பட்டோர் பெயர் விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இவர்கள் விமான தளத்தின் Gate 6A வாசலில் இருந்து 350 மீட்டர் தூரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விடத்துக்கு குண்டுகளை பாதுகாப்பாக அழிக்கும் (bomb disposal) இயந்திரங்கள் அனுப்பட்டுள்ளன.இவ்விடத்தை அண்டிய Whelford கிராமத்தில் உள்ள 85 வீடுகளில் இருந்தோரும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவின் நீண்ட தூரம் பறந்து தாக்கும் B-1 வகை குண்டுவீச்சு விமானங்கள் இந்த விமான தளத்தில் இருந்தே பறந்து சென்று ஈரான் மீது குண்டுகளை வீசின. இங்கே அமெரிக்காவின் 501st Combat Support Wing நிலைகொண்டுள்ளது.