1,700 ஆண்டு பழைய அநுராதபுர ஜெத்தாவனராமுவுக்கு CNN கட்டுரை 

1,700 ஆண்டு பழைய அநுராதபுர ஜெத்தாவனராமுவுக்கு CNN கட்டுரை 

இலங்கையின் அநுராதபுரம் பகுதியில் அமைந்துள்ள 1,700 ஆண்டுகள் பழைய ஜெத்தாவனராம (Jetavanaramaya) என்ற புத்த கோபுரம் தொடர்பாக அமெரிக்காவின் CNN செய்தி நிறுவனத்தின் Travel பகுதி பெரும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த கோபுரம் கடப்பட்டபோது இது உலகில் 3வது பெரிய மனிதம் கட்டியகட்டுமானமாக இருந்ததாம். அப்போது இது 122 மீட்டர் (400 அடி) உயரமாக இருந்துள்ளது. அப்போது உலகின் முதலாம், இரண்டாம் உயரமான கட்டுமானங்களாக எகிப்தில் உள்ள இரண்டு பிரமிட்டுகள் இருந்துள்ளன.

முதல் ஜெத்தாவனராமவுக்கு சுமார் 93.3 மில்லியன் சூளையில் தயாரிக்கப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அசல் கோபுரம் உடைந்து, சிதைந்து, அழிக்கப்பட பின்னர் கட்டிய கோபுரமே தற்போது உள்ளது. 12ம் நூற்றாண்டில் முதலாம் பராக்கிரம மன்னனால் மீளமைப்பு செய்யப்பட்ட புதிய கோபுரம் 71 மீட்டர் (233 அடி) உயரத்தை மட்டும் கொண்டது.

மகாஜன புத்த சமயத்துக்கும் தேரவாத புத்த சமயத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாகவும் இந்த மகாஜன புத்த கோபுரம் பராமரிப்பு அற்று போனதாகவும் கட்டுரை கூறுகிறது.

https://edition.cnn.com/travel/jetavanaramaya-sri-lanka-megastructure-anuradhapura