ரம்ப் மிரட்ட 100 மில்லியன் பரல் டீசலை விற்பனைக்கு விடும் G7

ரம்ப் மிரட்ட 100 மில்லியன் பரல் டீசலை விற்பனைக்கு விடும் G7

அண்மையில் G7 நாடுகள் தமது கையிருப்பில் உள்ள டீசலை விற்பனைக்கு விட மாறுதல் தான் அமெரிக்கா டீசலை ஏற்றுமதி செய்வதை தடை செய்யப்போவதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் மிரட்டி இருந்தார். இந்த மிரட்டலுக்கு பயந்த G7 நாடுகள் தமது கையிருப்பில் உள்ள டீசலின் 100 மில்லியன் பரலை விற்பனைக்கு விட முன்வந்துள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 நாடுகளே கூட்டாக 100 மில்லியன் பரல் கையிருப்பு டீசலை விற்பனைக்கு விட முன்வந்துள்ளன.

ஈரான் மீதான தாக்குதல்கள் காரணமாக ஹோர்முஸ் மற்றும் செங்கடல் கப்பல் பாதைகள் முடங்க அமெரிக்காவில் டீசல் விலை மிகையாக அதிகரித்து உள்ளது. அமெரிக்காவில் ஒரு கலன் (3.7 லீட்டர்) டீசலின் சராசரி விலை தற்போது $6.38 ஆக உள்ளது. கலிபோர்னியாவில் கலன் டீசல் $8.18 ஆக உள்ளது.

பிரித்தானியா தனது பாவனையின் 31% டீசலை அமெரிக்காவிடம் இருந்து பெறுகிறது.

அமெரிக்கா தினமும் 4 முதல் 5 மில்லியன் பரல் டீசலை உற்பத்தி செய்கிறது. அதில் 3.6 மில்லியன் பரல் டீசலை அமெரிக்க நுகர்வோர் பயன்படுத்த மிகுதியை அமெரிக்கா ஏற்றுமதி செய்கிறது.