ஊழல் குற்றச்சாட்டில் திருமதி ராஜபக்ச கைது

ஊழல் குற்றச்சாட்டில் திருமதி ராஜபக்ச கைது

முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச, வயது 73, இன்று புதன் அவரது கொழும்பு (Poorwarama Road, Kirulapone) வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தற்போது Lady Ridgeway Children’s Hospital என்ற சிறுவர்கள் வைத்தியசாலைக்கு Siriliya Saviya Fund என்ற தொண்டர் நிறுவனம் சேகரித்த அன்பளிப்பு பணம் ரூபா 10 மில்லியன் ($30,000) மாயமானது தொடர்பாக விசாரணை செய்யப்படுகிறார்.

இந்த பணம் வைத்தியசாலைக்கு பயன்பட இருந்த Scanner ஒன்றுக்கானது என்று கூறப்பட்டது. ஆனால் சீன அரசு ஏற்கனவே மேற்படி scanner ஐ நன்கொடையாக வழங்கி உள்ளது என்கிறது விசாரணை.

சிங்கப்பூரில் மருத்துவம் பெற்று வந்த சிராணி 5ம் திகதி திங்கள்கிழமையே இலங்கை வந்திருந்தார். அவர் தன்னை கைது செய்யவேண்டாம் என்று ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தாலும் அந்த வழக்கு 12ம் திகதியே விசாரணை செய்யப்படவுள்ளது.

இவர்களின் மகன் நாமல் ராஜபக்ச ஏற்கனவே விமான கொள்வனவு ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

யோசிதவும் (Yoshitha) ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.