2009ம் ஆண்டு Texas மாநிலத்தில் உள்ள Fort Hood இராணுவ தளத்தில் 13 படையினரை சுட்டு கொலை செய்த மேஜர் Nadal Hasan என்பவருக்கு டிசம்பர் 3ம் திகதி துப்பாக்கி சூடு (firing squad) மூலம் மரண தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த நிகழ்வு பகிரங்கமாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.
பொதுவாக தலபான் போன்ற அரசுகளே பகிரங்க மாறான தண்டனையை வழங்கும். அவ்வகை பகிரங்க மரண தண்டனைகளை மேற்கு நாடுகள் கண்டிக்கும்.
அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பலஸ்தீன குடும்பத்தில் 1970ம் ஆண்டு பிறந்த Nidal Hasan என்பவர் 1988ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் இணைந்து மருத்துவ கல்வி கற்க ஆரம்பித்தவர். ஆனாலும் அமெரிக்காவின் இஸ்லாமிய எதிர்ப்பு கொள்கைகளை, யுத்தங்களை அவர் பகிரங்கமாக சாடியுள்ளார்.
இறுதியில் இவர் அமெரிக்க இராணுவத்தின் மருத்துவ பிரிவில் மருத்துவராக பணியாற்றி 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இராணுவ மேஜர் தரத்தை அடைந்திருந்தவர். அந்த பதவி உயர்வுடன் அவர் Texas மாநிலத்தில் உள்ள Darnall Army Medical Center க்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் திகதி Nidal Hasan தான் சட்டப்படி கொள்வனவு செய்திருந்த துப்பாக்கியால் Texas Fort Hood இராணுவ தளத்தில் 13 படையினரை சுட்டு கொலை செய்தார்.
2013ம் ஆண்டு இவருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி இருந்தது. அந்த தீர்ப்பை இவர் இரண்டு தடவைகள் அப்பீல் செய்து தோல்வி கண்டார்.
