அமெரிக்கா பல முனைகளில் சீன தொழில்நுட்ப நிறுவனமான Huawei யின் வளர்ச்சியை முறியடிக்க முனைந்தாலும் நவீன Chip துறையில் Huawei வேகமாக வளர்ந்து வருகிறது.
Huawei தனது Kirin 9050 processor chip களை 2023ம் ஆண்டே விற்பனை செய்ய ஆரம்பித்து இருந்தது. தற்போது அந்த வகை 100 மில்லியன் chip களை Huawei விற்பனை செய்துள்ளதாக செவ்வாய் கூறியுள்ளது.
அத்துடன் Huawei தனது அடுத்த உயர் தரம் கொண்ட Kirin 2027 chip களை தயாரிக்கும் பணியில் வேகமாக முன்னேறுவதாகவும் கூறியுள்ளது.
அத்துடன் 2026ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் சீன சந்தையில் Huawei 572,000 AI accelerators களை விற்பனை செய்துள்ளதாக IDC என்ற ஆய்வு நிறுவனம் கூறுகிறது. அது சீன AI chip சந்தையின் 28%. அதே காலத்தில் அமெரிக்காவின் NVIDIA சீனாவில் 678,000 AI chip களை விற்பனை செய்துள்ளது. அது சீன சந்தையின் 34%. கடந்த ஆண்டு NVIDIA 44% சீன சந்தையை தன் கையில் கொண்டிருந்தது.
2023ம் ஆண்டு முதல் Huawei யின் Mate Pro தொலைபேசிகள் Kirin 9000 வகை chip ஐ கொண்டுள்ளது.
