அமெரிக்க வெள்ளை மாளிகையின் புதிய ஊடக செயலாளரான Katie Zacharia தன்னை ஒரு சட்டத்தரணி (attorney) என்றே பல இடங்களில் கூறி வந்துள்ளார். ஆனால் அவர் சட்டத்தரணியாக சித்தி பெறவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளில் Katie தன்னை ஒரு சட்டத்தரணி என்று 15 social media பதிவுகளில் கூறியுள்ளார். அவற்றில் சில பதிவுகள் தற்போது அழிக்கப்பட்டு உள்ளன.
இவர் தான் Pepperdine University Caruso School of Law என்ற கல்லூரியிலேயே சட்டத்தரணி பட்டம் பெற்றதாக கூறுகிறார். ஆனால் அவர் அங்கு bar சோதனையில் சித்தி ஆகவில்லை என்கிறது Wall Street Journal செய்தி ஒன்று.
கலிபோர்னியா சட்டப்படி bar சோதனை சித்தி அடையாத ஒருவர் தன்னை attorney என்று கூறுவது பெரும் குற்றமாகும்.
இவர் சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள Zhong Lun Law என்ற சட்ட நிறுவனத்திலும் பணியாற்றி இருந்தார்.
