2026ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடையும் ஆண்டுக்கான அமெரிக்க வரவு-செலவில் துண்டு விழும் தொகை (budget deficit) $1.99 டிரில்லியன் ($1,990 பில்லியன்) ஆகியுள்ளது. கடந்த ஆண்டு $1.78 டிரில்லியன் ஆக இருந்த துண்டு விழும் தொகை இந்த ஆண்டு $217 பில்லியனால் அதிகரித்து உள்ளது.
அமெரிக்க அரச bond கடன்களுக்கான வட்டி அரச செலவுகளின் உச்சத்தில் உள்ளது. அமெரிக்கா தற்போது $40 டிரில்லியன் (40,000 பில்லியன்) கடனில் உள்ளது.
இந்த ஆண்டு அமெரிக்காவுக்கு கிடைத்த வருமானம் $5.40 டிரில்லியன். ஆனால் செலவுகள் $7.40 டிரில்லியன். அதில் அரச bond கடன்களுக்கான வட்டி செலவு $1.36 டிரில்லியன்.
அமெரிக்க பாதுகாப்பு செலவும் இந்த ஆண்டு 6% ஆல் அதிகரித்து $917 பில்லியன் ஆக உள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் யுத்தமும் இந்த செலவு அதிகரிக்க காரணம்.
ரம்ப் அரசு மிகையான அளவில் இறக்குமதி வரியை அதிகரித்து அரச வருமானத்தை சிறிதளவில் அதிகரித்து இருந்தாலும், மேற்படி இறக்குமதி வரிகள் சட்டத்துக்கு முரணானவை என்று அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூற அறவிடப்பட்ட $145 பில்லியன் இறக்குமதி வரி திருப்பி வழங்கப்பட்டது (refunds).
