அரசுகள் bond மூலம் கடன் பெறுவது போல் பெரிய நிறுவனங்களும் பெரும் வேலைப்பாடுகளுக்கு bond மூலம் கடன் பெறும். அவ்வாறே CoreWeave என்ற அமெரிக்க AI Data Center கட்டுமான நிறுவனமும் தனக்கு தேவையான பணத்தை பெற்று வந்தது.
ஆரம்பத்தில் $1,000 Face Value கொண்ட CoreWeave bond ஒவ்வொன்றும் சுமார் $1,000 க்கே கொள்வனவு செய்யப்பட்டது. ஆனால் AI முதலீடுகளில் சந்தேகம் கொண்ட முதலீட்டாளரின் நாட்டம் தற்போது AI bond களிலும், பங்குகளிலும் குறைந்து வருகிறது.
தற்போது CoreWeave bond கடனுக்கு வழங்கப்படும் வட்டி 15% ஆக உயர்ந்து உள்ளது. இதனால் CoreWeave தனது பணிகளை தொடர, அபிவிருத்தி செய்ய தொடர்ந்தும் கடன் பெற முடியாத நிலைக்கு வரலாம்.
உதாரணமாக 2032ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி முதிர்வடையும் CoreWeave bond கடனுக்கு தற்போது 14.74% வட்டி வழங்கப்படுகிறது.
உலகம் எங்கும் CoreWeave க்கு குறைந்தது 51 data center கள் உள்ளன. NVIDIA போன்ற பெரிய AI தொழில்நுட்ப நிறுவனங்கள் CoreWeave நிறுவனத்தின் data center களையே பயன்படுத்துகின்றன.
2025ம் ஆண்டு CoreWeave $5.13 பில்லியன் வரவை (revenue) கொண்டிருந்தாலும் அந்த ஆண்டுக்கான நிகர இழப்பு (net loss) $1.2 பில்லியன்.
CoreWeave நிறுவனத்தின் பங்கு சந்தை பங்குகளின் பெறுமதியும் பாரிய அளவில் குறைந்து வருகிறது. அமெரிக்க NASDAQ பங்கு சந்தையில் விற்பனை செய்யப்படும் CoreWeave பங்கு (CRWV) ஒன்றின் விலை கடந்த 6 மாதங்களில் சுமார் 50% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.
