சீ, பூட்டினை ரம்ப் சீனாவில் சந்திப்பார்?

சீ, பூட்டினை ரம்ப் சீனாவில் சந்திப்பார்?

நவம்பர் மாதம் 18ம், 19ம் திகதிகளில் சீனாவின் Shenzhen நகரில் இடம்பெற உள்ள APEC (Asia-Pacific Economic Cooperation) அமர்வில் சீன சனாதிபதி சீயையும், ரஷ்ய சனாதிபதி பூட்டினையும் நேரடியாக சந்தித்து உரையாட ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கள் இது தொடர்பாக கருத்து கூறிய ரம்ப் தான் அணு ஆயுத கட்டுப்பாடு, யூக்கிறேன், பொருளாதாரம் போன்ற விசயங்களை உரையாட விரும்புவதாக கூறியுள்ளார்.

இந்த செய்தி தனித்து விடப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியாக அமையும்.

ரம்ப் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் எதிரான முரண்பட்ட செய்கைகளை, கூற்றுகளை அண்மை காலங்களில் தவிர்த்து வருகிறார்.

ஆனால் நவம்பர் 3ம் திகதி அமெரிக்காவில் இடம்பெற உள்ள mid term தேர்தல் ரம்பின் கைகளை கட்டிப்போட சந்தர்ப்பமும் உண்டு.