பிரேசிலில் ஞாயிறு இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் 80 வயதான தற்போதைய சனாதிபதி லூலா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். மூன்று தடவைகள் சனாதிபதியாக ஆட்சி செய்த இடதுசாரியான தற்போதைய சனாதிபதி லூலா (Luiz Inacio Lula de Silva) 4ம் தடவையாகவும் சனாதிபதி ஆகிறார்.
பிரேசிலில் 4 தடவைகள் சனாதிபதியாக வென்றவர் இவரே.
சீன ஆதரவு லூலாவுக்கு எதிராக முன்னாள் சனாதிபதியின் மகன் Flavio Bolsonaro போட்டியிட்டார். அமெரிக்க சனாதிபதி ரம்பின் ஆதரவு கொண்ட வலதுசாரியான Bolsonaro தற்போது ஒரு செனட்டர். இவரின் தந்தையான முன்னாள் சனாதிபதி 27 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்.
சுமார் 99% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் லூலாவுக்கு 64.2 மில்லியன் (51.8%) வாக்குகளும், Bolsonaro வுக்கு 48.2 மில்லியன் (48.2%) வாக்குகளும் கிடைத்துள்ளன.
நாட்டின் வடக்கே பெருமளவு ஆதரவு லூலாவுக்கும், தெற்கே பெருமளவு ஆதரவு Bolsonaro வுக்கும் கிடைத்துள்ளன.
