தேர்தலில் தோல்வியுற்ற Flavio அமெரிக்காவுக்கு தப்பி ஓட்டம்

தேர்தலில் தோல்வியுற்ற Flavio அமெரிக்காவுக்கு தப்பி ஓட்டம்

பிரேசில் சனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த Flavio Bolsonaro அமெரிக்காவுக்கு தப்பி ஓடியுள்ளார். ரம்பின் ஆதரவு கொண்ட இவருக்கு அமெரிக்கா உடனே அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தலில் தோல்வியுற்று 3 தினங்கள் முடியமுன் தப்பி ஓடிய Flavio தானே தேர்தலில் வென்றி அடைந்ததாகவும் அதனால் நீதிமன்றம் சீன சார்பு லூலா சனாதிபதி ஆவதை தடுக்க வேண்டும் என்றும் அமெரிக்காவில் இருந்து கேட்டுள்ளார்.

இவர் தோல்வி அடைந்த பின் தனது மனைவியுடனும் இரண்டு மகள்களுடனும் அண்டை நாடான ஆர்ஜென்டீனா சென்று அங்கிருந்து தனியார் விமானம் ஒன்று மூலம் Ecuador சென்று பின் Florida சென்றுள்ளார்.

இவர் நாட்டை விட்டு தப்பி ஓடு முன் இவரிடம் பிரேசில் நீதிமன்றம் இவரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தது. ஆனாலும் இவர் தனது கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை.

Eduardo Bolsonaro உட்பட பிரேசில் நீதிமன்றத்தால் தேடப்படும் பல Bolsonaro அணியினர் தற்போது அமெரிக்காவில் வாழ்கின்றனர்.

இவரின் தந்தை Jair Bolsonaro வும் 2022ம் ஆண்டு தேர்தலில் லூலாவிடம் தோல்வி கண்டபின் உடனே அமெரிக்காவுக்கு தப்பி ஓடியிருந்தார். ஆனால் பின்னர் தந்தை பிரேசில் செல்ல அங்கு அவருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது.