Binance நிறுவனத்தின் $6.3 பில்லியன் Crypto திருடப்பட்டது

Binance நிறுவனத்தின் $6.3 பில்லியன் Crypto திருடப்பட்டது

Binance என்ற cryptocurrency கைமாற்று நிறுவதின் (exchange) கைவசம் இருந்த crypto நாணயத்தில் $6.3 பில்லியன் வெள்ளிக்கிழமை இணையம் மூலம் (hacking) திருடப்பட்டு உள்ளது. 

Binance தனது அங்கத்தவர் crypto நாணயத்தை கொள்வனவு செய்ய, விற்பனை செய்ய, பரிமாற்றம் செய்ய வசதி செய்யும் நிறுவனம். இதனிடம் 335 மில்லியன் அங்கத்தவர் உள்ளனர். இந்த அங்கத்தவர் மூலம் Binance சுமார் $150 பில்லியன் பெறுமதியான crypto நாணயத்தை கொண்டுள்ளது.

திருடப்பட்ட crypto நாணயத்தின் சிறு தொகை Binance நிறுவனத்தால் மீள பெறப்பட்டு உள்ளது.

வட கொரிய அரச சார்பு hackers இந்த திருட்டை செய்திருக்கலாம் என்று Binance நிறுவனம் நம்புகிறது.

இந்த திருட்டே இதுவரை இடம்பெற்ற மிக பெரிய crypto திருட்டாகும். 2025ம் ஆண்டு Bybit என்ற crypto கைமாற்று நிறுவனத்திடம் இருந்து $1.5 பில்லியன் பெறுமதியான crypto நாணயம் திருடப்பட்டு இருந்தது. அது இரண்டாவது பெரிய திருட்டாகும்.