Ruchira Ranasingha என்ற 50 வயது இலங்கை பெண் அவருக்கு வழங்கப்பட்ட தவறான ஆலோசனை காரணமாக Cook Islands என்ற தீவில் முடங்கி உள்ளார். இலங்கை குடியுரிமை கொண்ட இவரால் தற்போது இலங்கைக்கும் வர முடியாமல் உள்ளது.
இலங்கையில் இவர் ஒரு ஆடை தயாரிப்பு வர்த்தகத்தை ஆரம்பித்திருந்தார். அந்த வர்த்தகம் இலாபகரமாக அமையாத நிலையில் இவர் 2018ம் ஆண்டு ஹாங் காங் நகரில் முதியோர் பராமரிப்பு பணியாளர் வேலைக்கு சென்றார்.
2022ம் ஆண்டு ஹாங் காங்கில் இருந்து visit விசா ஒன்று மூலம் நியூ சிலாந்து சென்றார். இவர் பின் அங்கே அகதி நிலைக்கு விண்ணப்பித்தார். அந்த அகதி விண்ணப்பம் அவர் எந்த நியூ சிலாந்து நிறுவனத்திலும் தொழில் செய்ய அனுமதி வழங்கியது.
ஆனாலும் இவர் தன்னிடம் இருந்த அகதி நிலையை மாற்றி employment விசாவுக்கு விண்ணப்பித்தார். அகதி விண்ணப்பம் விசாரணை செய்யப்படுவதால் வேலை விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இவர் பின் Immigration & Secretarial Service என்ற நிறுவனத்தின் உதவியை நாடினார். அந்த நிறுவனம் வழங்கிய தவறான ஆலோசனைக்கு ஏற்ப Ruchira நியூ சிலாந்தை விட்டு வெளியேறி Cook தீவுகளில் தங்கி, அங்கிருந்து நியூ சிலாந்து வேலை விசாவுக்கு விண்ணப்பித்தார். அந்த வேலை விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அத்துடன் அவர் மீண்டும் நியூ சிலாந்து செல்ல முடியாமல் போனது.
அதனால் Ruchira தற்போது Cook தீவுகளில் முடங்கி உள்ளார்.
இலங்கைக்கு திரும்பி போனால் போதும் என்ற நிலையில் இலங்கை வர Air New Zealand விமான சீட்டுகளை கொள்வனவு செய்திருந்தாலும் நியூ சிலாந்து பல தடவைகள் இவருக்கு transit விசா வழங்க மறுத்துள்ளது. இவர் விமான நிலையத்தில் மீண்டும் அகதி நிலைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற பயம் நியூ சிலாந்துக்கு. அஸ்ரேலியாவும் transit விசா வழங்க மறுத்துள்ளது.
இவர் Hawaii மூலம் இலங்கை வரலாம் என்றாலும் Hawaii transit விசாவுக்கு நியூ சிலாந்து அல்லது அஸ்ரேலிய அமெரிக்க தூதரகங்களில் நேரடியாக கைரேகை போன்ற அடையாளங்களை வழங்க வேண்டும். அதனால் அதுவும் சாத்தியம் அற்று உள்ளது.
தன்னை கை விலங்கிடதாவது இலங்கைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறுகிறார் Ruchira. கை விலங்கு கொண்டவரும் அகதி நிலைக்கு விண்ணப்பிக்கலாம்.
