உலகை சுற்றி ஒருவரின் நடை, 28 ஆண்டுகள், 50,000 km 

உலகை சுற்றி ஒருவரின் நடை, 28 ஆண்டுகள், 50,000 km 

வட இங்கிலாந்தில் உள்ள Hull என்ற நகரத்து Karl Bushby என்பவர் கடந்த 28 ஆண்டுகளாக சுமார் 50,000 km தூரம் காலால் நடந்து உலகை சுற்றி திங்கள் தாயின் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

இவர் உலகை சுற்றிய தனது நடை பவனியை 1998ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் திகதி Chile நாட்டின் Punta Arenas என்ற இடத்தில் ஆரம்பித்து இருந்தார். அப்போது இவருக்கு வயது 29 மட்டுமே. தற்போது இவரின் வயது 57.

இவர் ஒரு முன்னாள் பாராசூட் படையணி (paratrooper) உறுப்பினர்.

ஆரம்பத்தில் இந்த முயற்சிக்கு 5 ஆண்டுகள் போதும் என்றே இவர் கணித்திருந்தார். நடை ஆரம்பித்து சில காலங்களில் உலகை சுற்ற 12 ஆண்டுகள் தேவைப்படலாம் என்று கணிப்பை திருத்தி இருந்தார். ஆனால் உலகை சுற்றி நடக்க இவருக்கு இறுதியில் 28 ஆண்டுகள் தேவைப்பட்டன.

பயங்கர காடுகள், பாலைவனங்கள் இவரின் நடைக்கு இடராக அமைந்தன. சில நீர் நிலைகளை நீந்தி கடந்தார். அதற்கும் மேலால் சில நாடுகள் விசா வழங்க இழுத்தடித்தமையும் பயணத்துக்கு இடராக அமைந்தன.

உலகின் மிக பெரிய நாடான ரஷ்யாவை கடக்க மட்டும் இவருக்கு சுமார் 10 ஆண்டுகள் தேவைப்பட்டன.

Bering நீரிணையை நீர் உறைந்த காலத்தில் நடந்து கடந்திருந்தார். தடை செய்யப்பட்ட பகுதிகளுள் நுழைந்தமையால் இவர் சில நாடுகளின் சிறைகளிலும் அடைக்கப்பட்டிருந்தார். பனாமாவில் இவர் 18 தினங்கள் சிறையில் இருந்தார்.

இவர் மொத்தம் 30 நாடுகள் ஊடு நடந்து தனது சாதனையை செய்துள்ளார்.