2011ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையான காலத்தில் 496 மில்லியன் இந்தியர் வறுமைக்கோட்டுக்கு கீழான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு உள்ளனர் என்கிறது World Bank அறிக்கை ஒன்று.
World Bank கணிப்பின்படி இந்தியர் ஒருவர் நாள் ஒன்றில் $3 அல்லது அதற்கு கீழான வருமானத்தை கொண்டிருந்தால் அது வறுமைக்கோட்டுக்கு கீழான வாழ்க்கையாகும்.
அத்துடன் இந்தியாவில் 2011ம் ஆண்டில் 27.1% மக்கள் extreme poverty நிலையில் வாழ்ந்ததாகவும் அத்தொகை தற்போது 2.6% ஆக குறைந்து உள்ளதாகவும் World Bank கூறியுள்ளது.
சுமார் 2 சந்ததிகளுக்கு முன் சீனா இவ்வகை சாதனையை செய்திருந்தது. சீனா வறுமை கோட்டுக்கு கீழே வாழ்ந்த 800 மில்லியன் மக்களின் வாழ்க்கையை உயர்த்தி இருந்தது.
கடந்த நவம்பர் மாதம் கேரளா மாநிலமே முதலில் extreme poverty வாழ்க்கை கொண்டோர் இல்லாத மாநிலம் ஆகியது என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் காலத்தில் ஆரம்பித்த மேற்படி வளர்ச்சி பா.ஜ. காலத்திலும் தொடர்ந்தது.
