இஸ்ரேலுக்கான $3.8 பில்லியன் உதவியை நிறுத்துகிறாராம் ரம்ப்

இஸ்ரேலுக்கான $3.8 பில்லியன் உதவியை நிறுத்துகிறாராம் ரம்ப்

இன்று செவ்வாய் அமெரிக்காவில் இடம்பெறும் mid term தேர்தலில் கடும் போட்டியை எதிர்கொள்ளும் சனாதிபதி ரம்ப் தேர்தல் நாளான இன்று அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கும் $3.8 பில்லியன் உதவியை இந்த ஆண்டுடன் நிறுத்துவதாக கூறியுள்ளார்.

தேர்தல் தினத்தன்று காலை ரம்ப் செய்த இந்த அறிவிப்பு பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

பெருமளவு அமெரிக்கர் தற்போது இஸ்ரேல் மீது விசனம் கொண்டுள்ளனர். இஸ்ரேல் தனது இலாபத்துக்காக அமெரிக்காவை ஈரான் யுத்தத்தில் மாட்டி விட்டது என்றே பெருமளவு அமெரிக்கர் கருதுகின்றனர். அவ்வகை அமெரிக்கர் தனது கூற்றுக்கு மயங்குவர் என்று ரம்ப் கருதியிருக்கக்கூடும்.

2017ம் ஆண்டு செய்யப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றில் 16% அமெரிக்கர் மட்டுமே அமெரிக்கா இஸ்ரேலுக்கு மிகையாக ஆதரவு வழங்குகிறது என்று கூறி இருந்தனர். ஆனால் தற்போது 66% அமெரிக்கர் தாம் இஸ்ரேலுக்கு மிகையான ஆதரவு வழங்குவதாக கூறியுள்ளனர்.