Mid-term தேர்தலை வென்ற Democrats தண்டிப்புக்கு முதல் பலி Hegseth?

Mid-term தேர்தலை வென்ற Democrats தண்டிப்புக்கு முதல் பலி Hegseth?

செவ்வாய் இடம்பெற்ற 2026ம் ஆண்டுக்கான அமெரிக்க mid-term தேர்தலில் Democratic கட்சி பெரும் வெற்றி அடைந்து காங்கிரசின் Senate, House ஆகிய இரண்டு சபைகளையும் பெரும்பான்மை அதிகாரத்துடன் காப்பாற்றி உள்ளது.

செவ்வாய் வரை இரண்டு சபைகளிலும் ரம்பின் Republican கட்சியே பெரும்பான்மை அதிகாரத்தை கொண்டிருந்தது. அப்போது பல Republican கட்சி அதிகாரிகள் மிக கடுமையாக இயங்கினர். Democratic கட்சி உறுப்பினர்கள் கடுமையாக வசை பாடப்பட்டனர். தற்போது நிலைமை தலைகீழாக மாறி ரம்ப் உட்பட பலர் Democratic கட்சியால் குறி வைக்கப்படுகின்றனர்.

முதலில் ரம்பின் பாதுகாப்பு செயலாளர் Pete Hegseth பதவியை இழக்கும் நிலை தோன்றலாம் என்று கூறப்படுகிறது. Hegseth யின் பதவியை பறிக்கும் முதல் நடவடிக்கையாக House சபை முதலில் அவரை impeach செய்யக்கூடும். பின் Senate அவரை impeach செய்யக்கூடும்.  இரண்டும் நிறைவேறின் Hegseth பதவியை இழப்பார்.

Republican கட்சியின் படுதோல்விக்கு ஈரான் யுத்தம் பிரதான காரணி என்று சனாதிபதி ரம்பும், உதவி சனாதிபதி JD வன்சும் தற்போது பகிரங்கமாக கூறி உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் யுத்த தோல்விகளுக்கு பாதுகாப்பு செயலாளரே காரணம் என்று கூறி தம்மை பாதுகாக்க முனைகின்றனர்.

இதை தொடர்ந்து மேலும் பல ரம்ப் அணியினர் தமது பதவிகளை இழக்கலாம். ரம்பின் பதவியும் பறிக்கப்படலாம்.