அமெரிக்காவின் CBS செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்முகத்தில் தனது Republican கட்சியினரும் இஸ்ரேலை கடுமையாக வெறுக்கின்றனர் என்று அமெரிக்க சனாதிபதி ரம்ப் கூறியுள்ளார். Mid-term தேர்தலில் Republican கட்சி காங்கிரசின் இரண்டு சபைகளையும் இழக்க இதுவும் காரணம் என்றுள்ளார் ரம்ப்.
நேற்று ஞாயிறு ஒளிபரப்பான CBS தொலைக்காட்சியின் 60 Minutes நிகழ்ச்சியில் “there’s a great dislike, incredibly, for Israel” என்றுள்ளார் ரம்ப்.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் பண, இராணுவ உதவிகளை செய்வதை கடுமையாக கண்டிக்கும் Abdul El-Sayed என்ற இஸ்லாமியர் Michigan மாநிலத்தின் செனட்டர் ஆக வெற்றி பெற்றதும் இஸ்ரேல் மீதான வெறுப்பு காரணமாகவே என்றும் கணிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஆதரவு இல்லையேல் இஸ்ரேல் இருக்காது (Without us , Israel would not exist) என்றும் ரம்ப் கூறியுள்ளார். இக்கூற்று இஸ்ரேலுக்கு மிகவும் அவமானமான கூற்றாகும்.
அதேநேரம் Amir Tibon என்ற இஸ்ரேல் செய்தியாளர் Republican கட்சியினரும் Democratic கட்சியினரும் போட்டி போட்டு இஸ்ரேலை வெறுக்கின்றனர் என்றுள்ளார்.
