மேலும் 12 அமெரிக்க படைகளுக்கு சொந்தமான Boeing Stratotanker KC-135 வகை வானத்தில் வைத்து யுத்த விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் (refueling) பாரிய விமானங்கள் பிரித்தானிய தளத்தை விட்டு வெளியேறி உள்ளன. இந்த விமானங்கள் மீது ஈரான் தாக்கக்கூடும் என்ற பயம் காரணமாகவே இவை வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளன.
இந்த KC-135 விமானங்கள் பிரித்தானியாவின் Suffolk நகரத்து RAF Mildenhall விமான தளத்தில் நிலை கொண்டு இருந்தவை. இவற்றில் 10 திங்கள் வெளியேறி ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளுக்கு சென்று உள்ளன. மேலும் 1 ஜெர்மனிக்கும், 1 Glasgow வுக்கும் செவ்வாய் சென்றுள்ளன.
இவ்வகை பயம் காரணமாக ஏற்கனவே நீண்ட தூரம் பறந்து குண்டு வீடும் அமெரிக்க விமானங்கள் அமெரிக்காவுக்கு நகர்த்தப்பட்டு இருந்தன.
மறுபுறம் பிரித்தானியாவில் நிலை கொண்டிருந்த 41 வயது அமெரிக்க இராணுவத்தினர் ஒருவர் ரஷ்யா சார்பில் உளவு வேலைகள் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
