Jensen Huang என்ற nVIDIA நிறுவனத்தின் CEO வியாழன் தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். இவருக்கும் Megaspeed என்ற AI நிறுவனத்தின் CEO Alice Huang க்கும் இடையில் தொடர்ப்பு இருந்ததாகவும் Alice ஒரு சீன உளவாளியாக இருக்கலாம் என்றும் அமெரிக்கா கருதுகிறது.
1993ம் ஆண்டில் இருந்து nVIDIA நிறுவனத்தை வளர்த்து உலகின் இரண்டாவது பெரிய பங்கு சந்தை பெறுமதி கொண்ட நிறுவனம் ஆக்கியவர் Jansen. Alice உடனான தொடர்பு செய்தியாலும், இறுதியில் Jensen பதவி விலகியதாலும் nVIDIA நிறுவனத்தின் பங்கு சந்தை பெறுமதி சுமார் 5 தினங்களில் $550 பில்லியனால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
Megaspeed ஒரு சிங்கப்பூர் AI நிறுவனம் என்றாலும் சிங்கப்பூர் அதிகாரிகள் Alice சிங்கப்பூர் திரும்புவதை தடை செய்துள்ளனர். Alice தற்போது சீன தலைநகரம் பெய்ஜிங்கில் உள்ளதாக கூறப்படுகிறது.
Jensen விசயத்தில் இரண்டு சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்று Alice மூலம் சீனா nVIDIA தொழில்நுட்பங்களை பெற்று இருக்கலாம் என்பது. மற்றையது அமெரிக்கா தடை செய்த சீன நிறுவனங்களுக்கு Alice தரமான nVIDIA AI chip களை கொள்வனவு செய்திருக்கலாம் என்பது. இரண்டும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
Jensen சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் Lori என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உண்டு.
