அமெரிக்காவில் அனைத்து விமான சேவைகளும் முடக்கப்பட்டு உள்ளன. விமானங்களுடன் தொலைத்தொடர்பு செய்ய முடியாமையே காரணம் என்கிறது அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration).
சேவைகள் எப்போது மீண்டும் வழமைக்கு வரும் என்பதை திடமாக கூற முடியாது என்கிறது FAA. அத்துடன் இது ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும் FAA கூறுகிறது. ஆனாலும் உண்மை காரணம் இதுவரை அறியப்படவில்லை.
உதாரணமாக சிக்காகோ ORD விமான நிலையத்தில் இருந்து சில மணித்தியாலங்களாக எந்தவொரு விமானமும் மேலேறவில்லை. அனைத்தும் ஓடுபாதைகளிலும், taxi பாதைகளிலும் முடங்கி உள்ளன.
அமெரிக்காவில் நவம்பர் 13ம் திகதி 2,740 விமான சேவைகள் cancel செய்யப்பட்டு உள்ளன.
