அமெரிக்கா சென்ற வெளிநாட்டு மாணவர் தொகை 15% ஆல் வீழ்ச்சி

அமெரிக்கா சென்ற வெளிநாட்டு மாணவர் தொகை 15% ஆல் வீழ்ச்சி

இந்த ஆண்டு அமெரிக்கா சென்ற வெளிநாட்டு மாணவர் தொகை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15% ஆல் குறைந்துள்ளது. சனாதிபதி ரம்ப் அமெரிக்கா செல்லும் மாணவர்கள் மீது திணித்த இடர்களே வெளிநாட்டு மாணவர் குறைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவரை மட்டும் கருத்தில் கொண்டால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 9% ஆல் குறைந்த அளவு வெளிநாட்டு மாணவர்களே அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு படிக்க சென்றுள்ளனர்.

முற்காலங்களில் அமெரிக்கா சென்று உயர்கல்வி படிப்பவர்கள் அந்த துறையில் அமெரிக்க தொழில் அனுபவம் (OPT) பெறவும் இலகுவில் வசதிகள் செய்யப்படும். ஆனால் ரம்ப் அதற்கும் $70,000 கட்டணம் அறவிட அறிவித்திருந்தார்.

 அமெரிக்க Cleveland State University யில் கடந்த ஆண்டு 1,542 வெளிநாட்டு மாணவர் அனுமதி பெற்று இருந்தனர். இந்த ஆண்டு அத்தொகை 828 ஆகியது, சுமார் 46% வீழ்ச்சி.

அமெரிக்காவுக்கு அதிகம் மாணவரை அனுப்பும் இந்தியாவிலிருந்தும் குறைந்த அளவு மாணவரே இந்த ஆண்டு அமெரிக்கா சென்று உள்ளனர்.