Anthropic என்ற அமெரிக்க Artificial Intelligence (AI) நிறுவனம் பங்கு சந்தையில் மேலும் ஒரு $2 டிரில்லியன் நிறுவனம் ஆனது. Claude என்ற AI chatbot இந்த நிறுவனத்துக்குரியதே.
வியாழன் புதிதாக பங்கு சந்தைக்கு வந்திருந்த இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை $83 க்கே மதிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் வியாழன் மதியம் அளவில் இந்த பங்கு ஒன்றின் விலை $111.53 ஆக உயர்ந்து, நிறுவனத்தின் பங்கு சந்தை பெறுமதி $2 டிரில்லியன் ஆகியது.
பங்கு சந்தை மூடப்படும் வேளையில் இந்த பங்கு ஒன்றின் விலை $97.17 ஆகியது.
நிறுவன பங்குகளை பெற்ற இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 5,300 பேரில் 600 பேர் ஒரே நாளில் $100 மில்லியன் பங்கு சந்தை வெகுமதி உடையோர் ஆகினர். மேலும் 2,800 பேர் $10 மில்லியன் வெகுமதி உடையோர் ஆக்கினார். ஏறக்குறைய அனைவரும் குறைந்தது $1 மில்லியன் பங்கு சந்தை வெகுமதியை கொண்டுள்ளனர்.
2021ம் ஆண்டு ஆரம்பித்த இந்த நிறுவனத்தில் 2024ம் ஆண்டு 1,000 வரையான பணியாளர் மட்டுமே இருந்தனர்.
