அமெரிக்க F-16 யுத்த விமானத்தை ஈரான் சுட்டது

அமெரிக்க F-16 யுத்த விமானத்தை ஈரான் சுட்டது

வெள்ளிக்கிழமை ஹோர்முஸ் பகுதி Qeshm தீவுக்கு மேலாக ஈரானுக்கு எதிராக இயங்கிய அமெரிக்காவின் F-16 Fighting Falcon வகை யுத்த விமானம் ஒன்றை ஈரான் தனது நிலத்தில் இருந்து வானத்துக்கான ஏவுகணை ஒன்று மூலம் சுட்டுள்ளது.

சுமார் 32,200 அடி உயரத்தில் தாக்குதலுக்கு உள்ளான F-16 தாக்குதலின் பின் 28,000 அடி வரை விழுந்து சுமார் 4,200 அடி உரத்தில் UAE வான் பரப்புள் நுழைந்து அபுதாபியில் உள்ள Al Dhafra விமான தளத்தில் தரை இறங்கி உள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இரு தரப்பும் இணங்காத யுத்த அமைதி ஒன்று தற்போது தொடர்கிறது. குறிப்பாக அமெரிக்காவே தீர்வு இன்றிய அமைதி ஒன்றை விரும்புகிறது. ஆனால் ஈரான் தன் விதிகளை மீறும் கப்பல்கள், விமானங்கள் மீது தாக்குதல்களை தொடர்கிறது.

F-16 விமானத்துக்கு ஏற்பட்ட பழுது விபரங்கள் இதுவரை அமெரிக்காவால் தெரிவிக்கப்படவில்லை. தாக்குதலுக்கு உள்ளான F-16 விமான 7700 என்ற அவசரகால குறியீட்டு எண் அறிவிப்பை செய்துள்ளது.