உலக சதுரங்கத்தில் 8 வயது தமிழ் அமுதன் 7ம் இடத்துக்கு நிகர்

உலக சதுரங்கத்தில் 8 வயது தமிழ் அமுதன் 7ம் இடத்துக்கு நிகர்

உலக அளவில் சதுரங்க விளையாட்டில் (chess) 8 வயது தமிழ் அமுதன் (Tamizh Amudhan) 7ம் இடத்தில் இருந்த Vincent Keymer என்ற ஜேர்மன் நாட்டவரை வீழ்த்தி 7ம் இடத்துக்கு நிகராகி உள்ளார்.

2024ம் ஆண்டு தமிழ் அமுதனின் பெற்றார் தமது ஊரை விட்டு நீங்கி சிவகாசியில் உள்ள Hatsun Chess Academy என்ற கல்லூரியில் சதுரங்கம் மட்டும் பயில இவரை இணைத்தனர். ஏனைய பாடங்களை வீட்டில் வைத்தே பெற்றார் கற்பிக்கின்றனர்.

இந்த சதுரங்க கல்லூரியில் தற்போது 50 மாணவர்கள் சதுரங்கம் கற்கின்றனர். இவர்கள் கடும் போட்டிகள் மூலமே தெரிவு செய்யப்படுகின்றனர்.

நவம்பர் 24ம் திகதி முதல் ஜெனீவாவில் World Chess Championship போட்டிகள் ஆரம்பமாகும்.

சதுரங்கம் (chess) 6ம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.