சீன பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்ததனால் அமெரிக்காவின் நவீன AI chipகளும், தொழில் நுட்பங்களும் சீனா செல்ல வழி செய்தார் என்ற குற்றச்சாட்டில் பதவி பறிக்கப்பட்ட Jensen Huang திங்கள் மீண்டும் nVIDIA நிறுவதின் CEO ஆனார். சனாதிபதி ரம்பின் அரசியல் திருவிளையாடலே Huang மீண்டும் CEO ஆக காரணம்.
தன் மீதான மீதான விசாரணனைகள், குற்றச்சாட்டுகள் செலுத்திய அழுத்தங்கள் காரணமாக Huang 11 தினங்களுக்கு முன் CEO பதவியில் இருந்து விலகி இருந்தார். உடனே nVIDIA அதுவரை CFO ஆக பதவி வகித்தவரை CEO ஆக்கியது.
Huang பதவி விலகியவுடன் nVIDIA பங்கு சந்தை பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது. இதனால் விசனம் கொண்ட ரம்ப் மீண்டும் Huang ஐ CEO ஆக்கும்படி nVIDIA அதிகாரிகளை அழுத்தினார். Huang ஆல் அமெரிக்காவுக்கு ஆபத்து இல்லை என்று வாதாடினார். அதனால் nVIDIA மீண்டும் Huang ஐ CEO ஆக்கியது.
Huang மீண்டும் CEO ஆனபின் திங்கள் nVIDIA பங்கு சந்தை பெறுமதி $1 டிரில்லியனால் அதிகரித்து உள்ளது, சுமார் 30% பெறுமதி அதிகரிப்பு.
ஆனாலும் ரம்ப் கட்சி அரசியவாதிகள் உட்பட பலரும் Huang மீது விசாரணைகள் செய்ய விரும்புகின்றனர். Huang செய்த குற்றங்களை ஒரு சாதாரண nVIDIA பணியாளர் செய்திருந்தால் அந்த பணியாளர் நிச்சயமாக தண்டிக்கப்பட்டு இருப்பார். ஆனால் ரம்பின் தலையிட்டால் Huang ஐ காப்பாற்றி உள்ளது.
கடந்த mid-term தேர்தலில் Democratic கட்சி அமெரிக்க காங்கிரசின் House, Senate இரண்டையும் கைப்பற்றி இருந்தாலும் அவர்களின் பதவி ஜனவரி மாதமே நடைமுறைக்கு வரும். அப்போது Huang மீது கடுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம்.
