2022ம் ஆண்டு யூக்கிறேனை ரஷ்யா ஆக்கிரமித்த காலத்தில் இருந்து இன்று வரை சுமார் 720,000 படையினர் ரஷ்யா தரப்பில் பலியாகி இருக்கலாம் என்று Mediazona, Meduza ஆகிய எதிர்க்கட்சி அமைப்புகள் செய்த ஆய்வு ஒன்று கூறுகிறது.
Rosstat என்ற ரஷ்ய திணைக்களம் இதுவரை 490,000 ரஷ்ய தரப்பு படையினர் யூக்கிறேன் யுத்தத்தில் பலியானதாக கூறுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை காணாமல் போயுள்ள படையினர் தொகை உள்ளடவில்லை. அத்துடன் படையினர் பலியாகி மிக நீண்ட காலத்தின் பின்னரே Rosstat கணிப்பில் அந்த மரணங்கள் உள்ளடக்கப்படுகின்றன.
காணாமல் போயுள்ள படையினரில் 90% மரணித்து உள்ளதாக கணிக்கப்படுகிறது.
ரஷ்யா சார்பில் யூக்கிறேன் களம் சென்று பலியான வெளிநாட்டு படையினர் தொகை சுமார் 7,000 என்றும் கூறப்படுகிறது.
யூக்கிறேனில் பலியான ரஷ்ய படையினர் தொகை ஆப்கானிஸ்தான், Chechnya ஆகிய யுத்தங்களில் பலியான ரஷ்ய படையினர் தொகையிலும் அதிகம்.
மறுபுறம் யூக்கிறேனும் தனது படையினர் இழப்பை அறிவிப்பதில்லை. ஆனாலும் அவர்களின் மொத்த படையினர் இழப்பு சுமார் 150,000 ஆக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
