சிரியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அமெரிக்க வான்படை வீசிய குண்டு ஒன்றுக்கு சுமார் 100 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. வேறு சிலர் பலியானோர் தொகை 200 க்கும் அதிகம் என்றுள்ளனர். சிரியாவின் Manbij என்ற நகருக்கு சுமார் 15 km வடக்கே இந்த குண்டு வீசப்பட்டு உள்ளது.
.
.
IS என்ற குழுவுக்கு பயந்து ஓடிய பொதுமக்கள் மீதே இந்த குண்டு வீசப்பட்டு உள்ளது. தப்பி ஓடிய பொதுமக்களை IS என்று தவறாக கருத்தியதே இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.
.
.
அமெரிக்காவின் Central Command தாம் அந்த பகுதில் 18 தாக்குதல்களை செய்ததாகவும் அதில் ஒன்றுதான் இப்படி பொதுமக்களை தாக்கியதா என்பதை விசாரிப்பதாகவும் கூறியுள்ளது.
.
.
இவ்வாறான செய்திகளுக்கு அமெரிக்க ஊடங்கங்களில் முக்கியத்துவம் வழங்கப்படுவது இல்லை. அதனால் இவ்விடயம் நாளடைவில் மறக்கப்படலாம்.
.
.
கடந்த வருடம் இவ்வாறு மொத்தம் 459 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக லண்டனை தளமாக கொண்ட பத்திரிகையாளர் குழு ஒரு தெரிவித்து இருந்தது. ஆனால் அமெரிக்கா தாம் 26 பொதுமக்களை மட்டுமே தவறுதலாக கொலை செய்ததாக கூறியது.
.